top of page

பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே இயல்பாகத் தோன்றும் ஈர்ப்பு உயிர்களின் ஆதாரமான உணர்வு. வாழ்வின் அமுதம். சாதியும் மதமும் இந்த அமுதத்தை விஷமாக்கி வருகின்றன. மதங்களுக்கிடையிலான விரோதம் மத எல்லைகளைக் கடந்த காதலையும் தீண்டி அதனைக் கருகச் செய்கின்றது. மதம் தாண்டிய காதலை இறைமைக்கு எதிராகக் காணும் பிற்போக்குத்தனமும் அத்தகைய காதலைப் போர் வியூகமாகக் காணும் மதவாதமும் சந்திக்கும் புள்ளியில் வெடித்துச் சிதறுகின்றன இளம் மனங்களின் களங்கமற்ற காதல்கள். அன்பைத் தாழிட்டு அடைக்க முடியாது என்கிறார் வள்ளுவர். பேதங்களில் ஊறிய மானுட மனம் சாதி, மத, வர்க்க எல்லைகளைக் கடந்த காதல்களுக்கு அந்தப் பெருமையை வழங்க மறுக்கிறது. காதலும் அரசியலாக மாறிச் சந்தி சிரிக்கும் காலகட்டத்தின் காதல்களை அடையாளம் காட்டுகிறது சல்மாவின் நாவல்.

அடைக்கும் தாழ் / Adaikkum Thaazh

15,00 CHFPreis
  • Author:              சல்மா, Salma

    Publisher:         Kalachuvadu, காலச்சுவடு)

    No. of pages:   215

    Language:       தமிழ்

    Published on:  2023

    Book Format: Paperback

     Category:      Novel, நாவல்

    Asin:                 9789355232229

bottom of page