top of page

அரங்கமும் அந்தரங்கமும் Arangamum Anthrangamum 

 

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு" என்று வெளிப்படையாக எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையில் என்ன நமக்குத் தெரியாத அந்தரங்கம் இருந்துவிடப்போகிறது என்ற நினைப்புதான் இருந்தது, இப்புத்தகத்தை நான் வாங்கும்போது.
ஆனால் இது முற்றிலுமாக வேறு. கண்ணதாசன் இப்படி ஒன்றை எழுதினாரா? என்று ஆச்சரியமாக இருந்தது. அவர் எழுதிய, "சேரமான் காதலி", அர்த்தமுள்ள இந்து மதம்  போன்ற பல புத்தகங்களை நான் படித்துள்ளேன். அவற்றில் பல என் நூலகத்திலும் இருக்கிறது. நான் நினைத்ததுபோலவே இது அவரின் சொந்த அந்தரங்கங்களை அல்ல அவர் நாளும் கூடிப்பேசி பழகிய பலரின் அந்தரங்கங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.
1978ல் ராணி பத்திரிகையில் தொடராக வந்தபோது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு போற்றிய ஒரு மாபெரும் கவிஞன், தன்னுடைய சொந்த குடும்பவாழ்க்கையில் நொந்த மனிதராகவும், தன் இளம்பிராயத்து காதலை என்றும் மறக்க முடியாது கோப்பையில் வெந்த மனிதராகவும்  இருந்த ஒரு சில சம்பவங்களைத் தவிர, மற்ற அனைத்தும் கூட இருந்தவர்களின் ஏடாகூடல்கள்.
அநேக  இடங்களில் தான் கற்றுத்தேர்ந்த, அனுபவத்தில் உணர்ந்த வாழ்க்கையின் நிதர்சன உண்மைகளை தத்துவங்களாக உதிர்க்கும் கவிஞர், அப்பொழுதே புரையோடிப்போன சமூகத்தின் அவல நிலைகளுக்கான காரணங்களை அலசுகிறார்.

அரங்கமும் அந்தரங்கமும் / Arangamum Anthrangamum

12,50 CHFPreis
  • Author:      கவிஞர் கண்ணதாசன், Kavingnar Kannadasan

    Publisher: கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam

     Page:   271

    Category: கட்டுரைகள், இல்லறம்

    ISBN:       9788184020380

    Published on: 2010

     

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arangamum Anthrangamum, அரங்கமும் அந்தரங்கமும், கவிஞர் கண்ணதாசன், Kavingnar Kannadasan, Illaram, இல்லறம் , Kavingnar Kannadasan Illaram, கவிஞர் கண்ணதாசன் இல்லறம், கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavingnar Kannadasan books, buy Kannadhasan Pathippagam books online, buy Arangamum Anthrangamum tamil book.

bottom of page