பா.அ. ஜயகரனின் மூன்றாவது கதைத் தொகுதி இது. அரசுகளாலும் அமைப்புகளாலும் கைவிடப்பட்ட, துண்டாடப்பட்ட, தூக்கி எறியப்பட்ட மனிதர்களின் கதைகள் இவை. இந்தக் கதையின் மனிதர்களை ஆசிரியர் இரத்தமும் சதையுமாக ஆழமான இணக்கத்தோடு வரைந்து காட்டுகிறார்.
இலட்சியத்துக்காகப் பலிகடாவாக்கப்பட்ட சாட்சிகளை இக்கதைகளில் வாசிக்கலாம். அந்தச் சாட்சிகள் தரும் குற்றவுணர்வு அரசுகள், அமைப்புகள் மேலான விமர்சனமாக விரிவதை இத்தொகுப்பின் சாரமாகக் கொள்ளலாம்.
காட்சிகளையும் மனித மனங்களையும் துல்லியமான நறுக்குத் தெறித்தாற்போன்ற விவரணைகளோடு எழுதிக் காட்டும் ஆசிரியர் மனிதர்களின் இதத்தையும் இக்கதைகளில் துலக்கிக் காட்டுகிறார்.
புலம்பெயர்ந்த சூழலில் சமகாலக் கதைகளை எழுதிவரும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக பா.அ. ஜயகரனை இத்தொகுதி அடையாளம் காட்டும்.
அவனைக் கண்டீர்களா? Avanai Kandeerkalaa?
எழுத்தாளர் : பா. அ. ஜயகரன், P. A. Jayakaran
பதிப்பகம் : Kalachuvadu, காலச்சுவடு
No. of pages: 215
புத்தக வகை : Novel. நாவல்
Published on : 2023