சுந்தர ராமசாமி சிறுகதைகள் Sundara ramasamy Sirukathaikal Muluthokuppu
சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஓர் இனிய அனுபவமாக்கும் அதே நேரத்தில் தீவிரமான அனுபவத்தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன. செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவுகொள்ளும் சுகத்தை அளிக்கும்போதே உக்கிரமான தேடலின் கனத்தையும் நம் மீது சரியச் செய்துவிடுகின்றன. மனிததுக்கத்தையும் அவலங்களையும் மட்டுமன்றி நெகிழ்வையும் விகாசத்தையும் பதிவுசெய்கின்றன. வாழ்வுக்கும் நமக்கும், காலத்திற்கும் நமக்கும், மொழிக்கும் நமக்கும் இடையேயான உறவுகளைச் செழுமைப்படுத்துவது ஒரு கலைஞனின் முக்கியமான பங்களிப்பாக இருக்க முடியும். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் இதைப் பெருமளவில் நிறைவாகச் செய்திருக்கின்றன. -பின்னுரையில் அரவிந்தன்
சுந்தர ராமசாமி சிறுகதைகள்
Author: சுந்தர ராமசாமி (Sundara Ramasamy)
Publisher: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Language: தமிழ்
ISBN: 9788190464741
Published on: 2024
Book Pages: 888
Category: Short Story, சிறுகதை