top of page

வரலாறு அன்று முதல் இன்றுவரை வளைந்து வளைந்து ஓடிய பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறோம். அழிந்த சாம்ராஜ்யங்களின்மேல் முளைத்திருக்கும் புல்லைத் தின்று பசியாற வரும் கால்நடைகள் போல், அழிந்த சாம்ராஜ்யங்களால் தங்களுக்கென்று விடப்பட்ட மானியத்தால் ஆரியம் எப்படி வளர்ந்தது என்பதை குறிப்பாக சுட்டிக்காட்டுவதும், அவ்வளவு கொடிய ஆரிய நச்சரவத்தின் முன்னால் பரோபகாரத்தால் கை நீட்டிய மண்டலாதிபதிகள் மண்ணைக் கெளவிய சோக வரலாற்றை சித்தரிப்பதே இந்த சரிந்த சாம்ராஜ்யத்தின் குறிக்கோளாகும்.

 

நம்முடைய பழைய மன்னர்களின் பிரதாபத்தை பாழடைந்த மண்டபங்களும் பார்த்து சிரிக்க வைத்துவிட்டானே என்று ஆத்திரப்படுவோர், ஆத்திரத்துக்கு அடிமைப்பட்டு அறிவை யிழந்துவிடுவதைவிட அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்து இனி வரும் உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பதை சித்தரிக்க இந்த நூல் பேருதவியாக இருக்கும் என்பதே என் முழு நோக்கமாகும்.

-சி. பி. சிற்றரசு

சரிந்த சாம்ராஜ்யங்கள்

10,00 CHFPreis
Anzahl
  • Author:  சி. பி. சிற்றரசு, C. P. Sitrarasu

    Publisher:  மெய் நிழல்

    No. of pages:  84

    Category:  வரலாறு

bottom of page