இது கதையல்ல. போலவே கட்டுரையும். இரண்டும் கலந்த நடையில் எழுதப்பட்ட இத்தொடர், 'தினகரன் நாளிதழுடன் ஞாயிறு தோறும் வெளிவரும் 'வசந்தம்’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் அமோக வரவேற்பைப்பெற்றது. முதல் 13 அத்தியாயங்கள் நிலம் குறித்தே பேசப்பட்டிருக்கிறது. எதுவும் கற்பனையில்லை. மிகைப்படுத்தலும். ஆதாரங்கள் அடிப்படையிலேயே எழுதப்பட்டு இப்பொழுது புத்தக வடிவில் வெளிவருகிறது. தமிழகத்திலுள்ள அனைத்து ஐமீன்களின் வரலாறும் இதில் பதிவாகி இருக்கிறது என்று சொல்லமுடியாது. அதேநேரம், முக்கியமான ஜமீன்கள் எதுவும் விடுபட்டு விடவில்லை என உறுதியாகச் சொல்லலாம். எந்தெந்த ஆராய்ச்சியாளர்களின் நூல்கள் இத்தொடரை எழுத பயன்பட்டன என்பது அந்தந்த அத்தியாயங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. சரளமான நடையில் தமிழக ஜமீன்களின் வரலாறு பதிவாகி யிருக்கிறது என்பது இப்புத்தகத்தின் பலம்.
ஜமீன்களின் கதை / Jameengalin Kathai
எழுத்தாளர் : கே.என்.சிவராமன் (Ke.En.Sivaraaman)
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
புத்தக வகை : History | வரலாறு, தமிழர் வரலாறு , Essay | கட்டுரை
பக்கங்கள் : 720
Published on : 2021