top of page

ஏவி.எம். சரவணன் எழுதிய 'நானும் சினிமாவும்' சிறந்த படங்களைத் தயாரித்து, தமிழ் சினிமாவின் அந்தஸ்தையும், பெருமையையும் அகில இந்திய அளவுக்கு உயர்த்தியவர் ஏவி.மெய்யப்ப செட்டியார். ஏவி.எம். தயாரித்த முதல் படமான 'நாம் இருவர்', தமிழ்நாட்டில் புராணப் படங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமூகப் படங்களைத் தயாரிக்க வழி வகுத்தது. 'நாம் இருவர்' படத்தை பார்த்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், 'நாம் இருவர் பார்த்தேன். அப்படியே பிரமித்துப் போனேன்' என்று மெய்யப்ப செட்டியாருக்கு கடிதம் எழுதினார். ஏவி.எம். படங்கள் தொடர் வெற்றி பெற என்ன காரணம்? தனக்கு முழு திருப்தி ஏற்படும் வரை ஏவி.எம். படத்தை ரிலீஸ் செய்யமாட்டார். பணத்தைப்பற்றி கவலைப்படாமல், 5 ஆயிரம் அடி அல்லது 6 ஆயிரம் அடி படத்தை மீண்டும் எடுப்பார். பூரண திருப்தி ஏற்பட்ட பிறகுதான் படத்தை வெளியிடுவார். 30 வயது ஆன முதிர் கன்னிகளும், இரண்டு மூன்று குழந்தை பெற்றவர்களும் கதாநாயகிகளாக நடித்து வந்த காலகட்டத்தில், 17 வயது வைஜயந்தி மாலாவை, 'தமிழ்ப்பட உலகுக்கு ஏவி.எம். பெருமையுடன் வழங்கும் வைஜயந்தி மாலா நடிக்கும் வாழ்க்கை' என்று அறிமுகப்படுத்தினார். சிவாஜிகணேசன் 'பராசக்தி' மூலம் ஏற்படுத்திய பரபரப்பை, அதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே 'வாழ்க்கை' மூலம் உண்டாக்கியவர் வைஜயந்திமாலா. இந்த ஒரே படத்தின் மூலம் அகில இந்திய நட்சத்திரமாக உயர்ந்தார்.

ஆரம்பத்தில் சில படங்களை டைரக்ட் செய்த ஏவி.மெய்யப்ப செட்டியார் பிறகு நிர்வாகத்தை மட்டுமே கவனித்தார். படிப்பை முடித்ததும் சரவணனும், அவருடைய சகோதரர்களும் படத் தயாரிப்பில் தடம் பதித்தனர். புதுமையான படங்களை தயாரித்து வெற்றி மேல் வெற்றி பெற்றார்கள். இவர்களால் உருவாக்கப்பட்ட கலைஞர்கள் ஏராளம். இந்தியாவிலேயே 73 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸ்டூடியோ 'ஏவி.எம்.' அத்துடன் அங்கு 175 படங்களுக்கு மேல் தயாராகியுள்ளன. இத்தகைய தகவல்களை 'நானும் சினிமாவும்' என்ற இந்தப் புத்தகத்தில் சுவையாகவும், விறுவிறுப்பாகவும் எழுதி இருக்கிறார், ஏவி.எம்.சரவணன். மொத்தம் 416 பக்கங்கள். பக்கத்துக்குப்பக்கம் வண்ணப்படங்கள். புதிய புதிய தகவல்கள். சுருக்கமாகச் சொன்னால் சினிமா பற்றிய ஒரு கலைக்களஞ்சியம் இந்தப் புத்தகம் என்று கூறலாம்.

 

எ.வி.எம்.சரவணன்

'ஏவி.எம். சரவணன்' என்று அனைவராலும் அறியப்படும் எம்.சரவணன் அவர்கள், அமரர் ஏவி.மெய்யப்பன்- இராஜேஸ்வரி அம்மையார் ஆகியோரின் புதல்வராவார். 3.12.1939-ல் பிறந்த இவர், தன் 18-வது வயதில் அதாவது 9.4.1958 அன்று திரைத் தொழிலுக்கு வந்தார். அன்று முதல் இன்று வரை 60 ஆண்டுகளாக திரையுலகில் நீண்ட அனுபவம் உள்ளவர். ஏவி.எம். ஸ்டூடியோ, தயாரிப்பு, விநியோக நிர்வாகம் என அனைத்து த் துறையிலும் பணியாற்றியவர். 'மாமியார் மெச்சிய மருமகள்' (1958) முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் 125 படங்களில் பணியாற்றியுள்ளார். சென்னை மாநகர ஷெரீஃபாக தொடர்ந்து இரண்டு வருடங்கள் பதவி வகித்துள்ளார். இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் (FPAI), அகில உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராகவும் (FIAAP) பதவி வகித்துள்ளார். தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது, ராஜா சாண்டோ விருதுகளையும், சத்திய பாமா பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். 'முயற்சி திருவினையாக்கும்', 'மனதில் நிற்கும் மனிதர்கள்' (4 பாகங்கள்) மற்றும் 'ஏவி.எம். 60 சினிமா' ஆகிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

நானும் சினிமாவும் / Naanum Cinimaavum

16,00 CHFPreis
  • எழுத்தாளர் A. V. M. Saravanan, ஏ. வி. எம். சரவணன்

    பதிப்பகம் :     Daily Thanthi, தினத் தந்தி

    புத்தக வகை :    Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, சினிமா, cinema

    பக்கங்கள் :         416

    பதிப்பு :          9788193663325

    ISBN :              2018

     

bottom of page