top of page

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்களின் வாழ்வில் கலந்த இரட்டைக் காப்பியங்கள். மணிமேகலை கூறும் தத்துவக் கூறுகளும் வாழ்வியல் கருத்துகளும் அறம் தொடர்பான நிலைப்பாடுகளும் மிக முக்கியமானவை. காதல் வாழ்க்கைக்கும் துறவு வாழ்க்கைக்கும் இடையேயான அத்தனை முரண்பாடுகளையும் மணிமேகலை போல அலசும் பிறிதொரு நூல் இல்லை என்றே சொல்லிவிடலாம். மணிமேகலை நூலில் உள்ள அனைத்து ரசங்களையும் உள்ளடக்கி நாவல் வடிவில் எழுதுவது என்பது பெரிய சவால். அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் சத்தியப்பிரியன். தமிழில் ‘மணிமேகலை’க்கு இத்தனை விரிவான ஆழமான அதேசமயம் எளிதான உரை நாவல் வடிவில் வந்ததில்லை எனலாம். ‘மணிமேகலை’யில் வரும் தத்துவப் போக்குகளைக் கூட எல்லாரும் புரிந்துகொள்ளும் வண்ணம் நூலாசிரியர் எழுதியிருப்பது சிறப்பு. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆசிரியர் குறிப்பாகச் சொல்லப்படும் கூற்றுகள், மணிமேகலை என்னும் நூலையும் தாண்டி, நம் பண்பாட்டின் பல கண்ணிகளைத் தொட்டுச் செல்கின்றன. இது இந்த நூலை மேலும் முக்கியமானதாக்குகிறது.

நாவல் வடிவில் மணிமேகலை / Manimekalai

19,00 CHFPreis
Nicht verfügbar
  • Book Title :       மணிமேகலை (நாவல் வடிவில்) (manimekalai)

    Author:            சத்தியப்பிரியன் (Saththiyappiriyan)$

    Publisher:       சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher)

    Pages:               78

    Category:       Novel | நாவல், New Arrivals, Sangam literature | சங்க இலக்கியம்

bottom of page