‘ஷீர்டி’ என்ற பெயரைக் கேட்டதும் ஆன்மிக அன்பர்களின் உள்ளத்தில் சாய்பாபாவின் அருளுருவம் தோன்றும். அனைத்து மக்களும் சென்று வழிபடும் புண்ணியத் தலமாக விளங்கிக்கொண்டிருக்கும் ஷீர்டி, மதநல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் விளங்கிக்கொண்டிருக்கிறது. சாய்பாபா மனிதரா, துறவியா, மகானா என்றால், இது அத்தனையும்தான் என்பதே சாய்பாபா பக்தர்களின் நம்பிக்கை. தன் மேல் நம்பிக்கை வைத்து வழிபடும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி அவர்களுக்கு வழிகாட்டும் புனிதராக இன்றும் விளங்கிக்கொண்டிருக்கிறார் சாய்பாபா. சாய்பாபா நிகழ்த்திய அதிசயங்கள், அவர் புரிந்த மகிமைகள், பாபாவையே அனுதினமும் பாராயணம் செய்யும் பக்தர்களின் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்கள் பற்றி ஆனந்த விகடனில் வெளியான பாபாயணம் தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பாபாவின் சரித்திரம் என்று கருதக்கூடிய அளவுக்கு பாபாவின் அருட்செயல்கள் அனைத்தும் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பலதுறை பிரபலங்கள், சாய்பாபா தங்களை எப்படி ஆட்கொண்டார் என தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருப்பது இந்த நூலுக்குக் கூடுதல் சிறப்பு. இனி சத்ய சாய் பாபாவின் அருளைப்பெற ஆயத்தமாகுங்கள்!
பாபாயணம் / BABAYANAM (Vikatan)
Book Title பாபாயணம் (BABAYANAM) Author ஜி.ஏ.பிரபா (Ji.E.Pirapaa) Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) Published On Jun 2021 Year 2021 Edition 1 ISBN 9788194946571 Category Spirituality | ஆன்மீகம்