பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தருகின்ற பெரும் பணம் ஈட்டுவதற்கான ரகசியங்கள்
கியோசாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.
புத்தகத்தில் காணப்படும் தலைப்புகளில் சில வருமாறு:
நிதி பற்றிய அறிவின் பெறுமதி
நிறுவனங்கள் செலவழித்ததன் பின்னரே வரிகளை செலுத்துகின்றனர், அதேவேளை தனிநபர்கள் முதலில் கட்டாயம் வரியைச் செலுத்த வேண்டும்.
நிறுவனங்கள் எனப்படுபவை, அனைவரும் பயன்படுத்தக்கூடிய செயற்கையான அமைப்புகள், ஆனாலும் ஏழைகள் அதை எப்படி பயன்படுத்தலாம் என தெரியாதவர்கள்.
கியோசாகி மற்றும் லேச்ட்டர் ஆகியோரின் கருத்துக்களின் படி, உங்கள் சொத்துகளிலிருந்து வருமானம் எத்தனை நாள்களுக்கு உங்கள் வாழ்வாதாரமாக இருக்க முடியுமென்பதைக் கொண்டே உங்கள் செல்வம் அளவிடப்படும் என்பதாகும். உங்களின் மாதாந்த வருமானம், உங்களின் மாதாந்த செலவை மிஞ்சுகின்ற போதே, செல்வம் அளவிடப்படுவது எனப்படுவது, நிதி நிலைமைகளில் நீங்கள் தன்னிறைவு அடைதல் சாத்தியமாகும். இந்த நூலில் வருகின்ற கதாபாத்திரங்களான இரு தந்தைகளும் தங்கள் மகன்களுக்கு இந்த விடயங்களை கற்பிக்க வெவ்வேறான வழிமுறைகளைக் கையாண்டனர்.
பணக்கார தந்தை ஏழைத் தந்தை / Panakkaara thanthai-Yezhai thanthai
Author: ராபர்ட் கியோஸாகி Robert T. Kiyosaki
Translator: நாகலட்சுமி சண்முகம் Nagalakshmi Shanmugam
Publisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
No. of pages: 248
Language: தமிழ்
ISBN: 9788183223751
Published on: 2013
Book Format: Paperback
Category: கட்டுரை, மொழிபெயர்ப்பு
Subject: சுயமுன்னேற்றம்
Rich Dad Poor Dad: What the Rich Teach their Kids About Money that the Poor and Middle Class Do Not!
ராபர்ட் கியோஸாகி
உலகம் நெடுகிலும் பல இலட்சக்கணக்கான மக்கள் பணத்தைப் பற்றிச் சிந்திக்கும் விதம் குறித்துக் கேள்வி கேட்டு, அதை மாற்றியுள்ளவர் என்ற பெருமைக்குரியவர் ராபர்ட் கியோஸாகி. பணத்தைப் பற்றிய பாரம்பரியச் சிந்தனைகளுடன் முரண்படுகின்ற அவர், வெளிப்படையாகவும் துணிச்சலோடும் பேசுகின்றவர். எல்லோருக்கும் நிதிசார் கல்வி கிடைக்க வேண்டும் என்று அவர் குரல் கொடுத்து வருகிறார்.