'காதல் என்பது ஒருவரையொருவர் ஆக்கிரமிப்புச் செய்து, அதில் இன்பங் கண்டு, அன்பின் ஆழத்தினை பரிசோதித்துக் கொள்ளும் உறவுமுறை' என அனைவரும் தம அகத்தின் ஏதோ ஒரு மூலையில் நிறுவி வைத்திருக்கும் அடிப்படைச் சிந்தனையை உடைத்துப் போடுகிறது இந்த நாவல். ஜெயகாந்தனின் பார்வையில் இன்டெலெக்சுவல் காதலும் அழகு, அதனால் ஏற்படும் பிரச்னையைத் தங்களின் புரிதல் மூலம் எப்படித் தாங்களே தீர்த்துக் கொள்ள முயல்கிறார்கள், முரண்படுகிறார்கள் என்பதைத் தனது நடையில் அவர் சொல்லிய விதமும் அழகு. அதுவும் அந்தக் 'கல்யாணி' எனும் கதாப்பாத்திரத்தை அவர் நமக்குத் தந்திருக்கிற விதம்,'What a woman' என உள்ளுக்குள்ளே ஒருமுறை சொல்லிப்பார்க்க வைக்கிறது.
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் / Oru Nadigai Naadagam Parkkiral
எழுத்தாளர் : ஜெயகாந்தன் (Jeyakanthan)
பதிப்பகம் : மீனாட்சி புத்தக நிலையம் (Meenachi Puthaka Nilaiyam)
புத்தக வகை : Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ், Women | பெண்கள்
பக்கங்கள் : 368
Published on : 2019
ISBN : 9788183453547