The Old Man and the Sea கிழவனும் கடலும் / Kizhavanum Kadalum
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன.
பல மொழிகளில் திரைப்படங்கள் இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்டள்ளன. ‘கிழவனும் கடலும்’ வெளிவந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்றும் வாசிக்கும்போது இது ஒரு அற்புதமான கதை. ஒரு தளத்தில் மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம், இன்னுமோர் தளத்தில் மானுடப் பண்பாடு, துணிச்சல், போர்க்குணம் பற்றியது. பிறிதொரு தளத்தில் அமெரிக்காவாழ்வின் மையமாகத் தனிமனிதன் – குழுவோ அமைப்போ அல்ல – இருந்த காலகட்டத்தின் கதை. வாழ்வுக்கான அவன் போராட்டத்தின் சித்திரம். சிக்கனமான சொற்பிரயோகம், தெறிக்கும் விவரணைகளில் தனிமனிதப் போராட்டத்தைக் கொண்டாடும் படைப்பு.
கிழவனும் கடலும் / Kizhavanum Kadalum
Author: எர்னெஸ்ட் ஹெமிங்வே Ernest Hemingway
Translator: எம். எஸ். M.S.
Publisher: காலச்சுவடு Kalachuvadu Publications Pvt Ltd
No. of pages: 104
Language: தமிழ் Tamizh
ISBN: 9788187477457
Published on: 2017
Book Format: Paperback
Category: நாவல், மொழிபெயர்ப்பு Novel, Translation
Subject: பிற