Kadal Pura
சாண்டில்யன் சரித்திர நாவல் - Chandilyan
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.
கடல் புறா (மூன்று பாகங்கள்)
Book Title கடல் புறா (மூன்று பாகங்கள்) (kadal Pura) Author சாண்டில்யன் (Saantilyan) Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam) Pages 1700 Published On Mar 1967 Year 1967 Edition 65 Format Hard Bound Category Historical Novels | சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ்