top of page

‘கருமமே கண்ணாக’ என்பது அறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு கடினமான வேலையை, எந்த கவனச்சிதறலுக்கும் ஆளாகாமல் ஒருமித்த கவனக்குவிப்புடன் மேற்கொள்வதற்கான திறனாகும். கருமமே கண்ணாகச் செயல்படுவது நீங்கள் செய்கின்ற எந்தவொரு வேலையிலும் நீங்கள் சிறப்புற உதவும், குறைவான நேரத்தில் நீங்கள் அதிகமானவற்றைச் சாதிக்க வழி வகுக்கும், ஒரு திறமையில் மேதமை பெறுவதிலிருந்து வரக்கூடிய உண்மையான மனநிறைவை உங்களுக்கு வழங்கும். சுருக்கமாகக் கூறினால், ஒருமித்த கவனம் செலுத்தக்கூடிய திறன் என்பது, போட்டிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய உலகில் சர்வ வல்லமை வாய்ந்த ஓர் ஆயுதத்தைப் போன்றது.

ஆனாலும், இரைச்சல்மிக்க அலுவலகங்களில் பணியாற்றுகின்ற அறிவுசார் ஊழியர்களாக இருந்தாலும் சரி, தங்களுடைய முன்னோக்கைக் கூர்தீட்டிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்ற படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, பெரும்பாலான மக்கள், ஆழ்ந்த கவனத்துடன் வேலை செய்வதற்கான திறனை இழந்துள்ளனர். மாறாக, மின்னஞ்சல்களிலும் சமூக ஊடகங்களிலும் அவர்கள் தங்களுடைய நாட்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் - இதைவிடச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது என்பதை உணராமல்!

கலாச்சார விமர்சனங்களையும் நடைமுறையில் செயல்படுத்தப்படக்கூடிய அறிவுரைகளையும் உள்ளடக்கிய இந்நூல், கவனச்சிதறலுக்கு உள்ளான ஓர் உலகில் ஒருமித்த கவனத்துடன் வெற்றி பெறுவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கின்ற எவரொருவருக்கும் வழி காட்டும்..

கருமமே கண்ணாக | Deep Work: Rules for Focused Success in a Distracted World

CHF18.00Preis
  • Author:        கால் நியூபோர்ட், Cal Newport

    Translator:  பி. எஸ். வி. குமாரசாமி, P. S. V. Kumarasamy

    Publisher:   மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ், Manjul Publishing House

    No. of pages:      304

    Category:   கட்டுரை, மொழிபெயர்ப்பு

    Iban:    9789391242961

bottom of page