சோசலிசத் தமிழீழத்தை நோக்கி / socialisa tamileezhaththai nokki
by அன்ரன் பாலசிங்கம் (Anton Balasingham)
புதுமையை விரும்பும் புரட்சிவெறி கொண்ட புதிய இளம் சமுதாயம் எமது மண்ணில் பூத்து வருகிறது. ஒடுக்குமுறையால் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட இவர்கள் விடுதலைத் தாகம் கொண்டு அலைகிறார்கள். இவர்களின் கைகளில்தான் தமிழ் பேசும் மக்களின் தலைவிதி தங்கியிருக்கிறது. இந்த இளைஞர்களிடம் உறுதியிருக்கிறது, உயிரையும் மதியாத உளவுரம் இருக்கிறது. அடக்குமுறையை உடைத்தெறியும் ஆற்றல் இருக்கிறது. இவர்கள் புரட்சிவாதிகள் புரட்சிப்பாதையை விரும்புபவர்கள், தமிழீழத்தைப் பிறப்பிக்கும் தணியாத இலட்சியமும் இவர்களிடம்தான் உண்டு. தமிழீழத்தின் எதிர்காலக் காவலர்களும் இவர்கள்தான். இந்தப் புரட்சிவாத இளைஞர்களின் விடுதலையெழுச்சிக்கு விருந்தாக இந்தச் சிறிய நூலை அர்ப்பணிக்கின்றோம். ஒடுக்குமுறையால் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட இவர்கள் விடுதலைத் தாகம் கொண்டு அலைகிறார்கள். இவர்களின் கைகளில்தான் தமிழ் பேசும் மக்களின் தலைவிதி தங்கியிருக்கிறது. இந்த இளைஞர்களிடம் உறுதியிருக்கிறது. கடந்த பொதுத்தேர்தலில் இந்தச் சரித்திர சம்பவம் திகழ்ந்தது. இலங்கை அரசியல் வரலாற்றிலேயே சரித்திர கிபயத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி இது. கால் நூற்றாண்டு காவமாய் குமுறி வந்த தமிழ் அரசியல் போராட்டத்தில் ஒரு மாபெரும் திருப்பமாக இது அமைந்தது. அதுதான் சேலிசத் தமிழீழத் தனி நாட்டுக் கோரிக்கை. தமிழீழ மக்கள் மேற்கொண்ட புரட்சிகரமான தீர்மானம். தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிரான ஒடுக்கு மன்றபின் உச்ச கட்டத்தின்போது இலங்கையில் பொதுத் தேர்தல் நடந்தது. ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து சென்று தனி நாடு அமைப்பதென்ற கோரிக்கைக்கு வாக்களிக்குமாறு தமிழ் பேசும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை ஒரு தேசிய இனத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொதுசன வாக்கெடுப்பாகவே இந்தத் தேர்தல் அமைந்ததெனலாம், இத்தேர்தலில், தமிழீழ தேசிய சுதந்திரத்தை, அதாவது, இறைமை கொண்ட சோசலிச அமைப்பைக் கொண்ட தனியரசை ஆதரித்து மக்கள் வாக்களித்தனர். அதாவது, இத்தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் தமது சுய நிர்ணய உரிமையை, சனநாயக அரசியல் நியதிக்கு அமையப் பிரயோகித்துத் தனியரசை அமைப்பதே தமிழ்த் தேசிய இனத்தின் ஒன்றுபட்ட அபிலாசையெனச் சிங்கள ஆட்சியாளருக்கும் உலகத்திற்கும் எடுத்துரைத்தனர்.
சோசலிசத் தமிழீழத்தை நோக்கி
Author: அன்ரன் பாலசிங்கம் (ஆசிரியர்)
Categories: Eezham | ஈழம் , Essay | கட்டுரை
Format: Paper Back
Language: Tamil
Publisher:தமிழர் தாயகம் வெளியீடு