சாண்டில்யன் சரித்திர நாவல் - Chandilyan
Publisher: வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Category: சரித்திர நாவல்கள் | Historical Novels, Classics | கிளாசிக்ஸ்
Page: 292 pages
Edition Language: Tamil
செண்பகத்தோட்டம் / Senbagathottam
செண்பகத் தோட்டம் ஒரு சமூகக் கதை. இதை நான் எழுதத் துவங்கியதும் பலபேர் ஆச்சரியப்பட்டார்கள். பெரும்பாலும் நான் சரித்திரக் கதைகளையே எழுதியிருப்பதால் எல்லோரும் என்னை சரித்திரக் கதாசிரியர் என்றே அழைத்து வந்திருக்கிறார்கள். பத்திரிகைகளும் இதே பட்டத்தைத்தான் அளித்திருக்கின்றன. சமூகக் கதைகளை நான் எழுதினால் சரியாக இருக்காது என்று திட்டமான அபிப்பிராயமுள்ளவர்களும் உண்டு. ஆகவே, நான் இந்தக் கதையை எழுத ஆரம்பித்ததும் பலர் ஆச்சரியப்பட்டார்கள். உங்களுக்கேன் இந்தத் தொல்லை என்று சிலர் சொல்லவும் சொன்னார்கள். இத்தனை எதிர்ப்புக்களுக்கிடையே, என்னுடைய பிடிவாத குணத்தால் இந்த சமூகக் கதையை எழுத முற்பட்டேன். அப்படி நான் எழுதும் சமூகக் கதையைப் புதுமையான முறையில் அமைக்கவும் தீர்மானித்தேன். கதை எழுதுவது என்ற சாக்கை வைத்துக் கொண்டு தற்காலத் தமிழ்நாட்டின் கிராமங்களை ஆராய்வது என்று முடிவு செய்தேன். அதன் விளைவுதான் செண்பகத் தோட்டம். செண்பகத் தோட்டத்தில் கதையிருப்பதை பார்ப்பீர்கள். கதையையும் மீறி கதாபாத்திரங்கள் அதாவது சமூகத் தோழர்கள் உங்கள் கண்முன்னே காட்சி அளிப்பதைப் பார்ப்பீர்கள். அச்சமோ, விருப்பு வெறுப்போ இல்லாமல் தமிழ் நாட்டின் மக்களை அவர்களுடைய குணதோஷங்களுடன் உங்கள் கண்முன்பாக நிறுத்தப் பிரயத்தனப்பட்டிருக்கிறேன். வெளிவேஷ வராஹாச்சாரி, இனத்துவேஷ அழகண்ணல், தாஷ்டிகக் குருக்கள், கம்பராமாயண உத்திராதி படையாச்சி, ராஜபார்ட் ராமலிங்கம் - இவர்கள் அனைவரையும் நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கதையை எழுதியதில் எனக்கு மிகவும் திருப்தி. வாசகர்களாகிய உங்களுக்கு இது எத்தனை தூரம் திருப்தியளிக்குமோ எனக்குத் தெரியாது. இதற்கு நீங்கள் ஆதரவளித்தால் இதுபோன்ற இன்னும் பல கதைகளை எழுத உத்தேசித்திருக்கிறேன்.