top of page

சுத்தமாக... சுவையாக... அசைவ உணவு தயாரிக்கும் முறைகள்

 

அசைவப் பண்டங்களை எப்படிச் சுத்தம் செய்வது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளாத ஒரே காரணத்தினாலேயே அவற்றைப் பலர் உண்ணாமல் இருக்கிறார்கள். அசைவப் பண்டங்களைச் சுத்தம் செய்வதில் பெரிய தொழில்நுட்ப இரகசியம் அடங்கியிருக்கிறது. நமது பாட்டிமார்கள் எப்படிக் கோழிகளை அறுத்துக் குழம்பு வைத்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. எல்லாவற்றையும் தயார் நிலையில் கடைகளில் வாங்கிக் கொள்வதற்கு இன்று நாம் பழகிவிட்டோம். ஆனால் நாமே சுத்தம் செய்து சமைத்தால்தான் நமக்குக் கூடுதல் திருப்தி கிடைக்கும். இவற்றைக் கற்றுத் தரும் வேலையைக் கல்லூரிகள் செய்வதில்லை. செவிவழிச் செய்தியாகக் கேட்டும் பார்த்தும் தெரிந்து கொண்டால்தான் உண்டு என்பதே இன்றைய நிலை. மக்களின் தேவை வளர்ந்து கொண்டே வரும் உணவுப் பொருள் தயாரிப்புத் துறையில் சத்தமில்லாமல் பெரும் புரட்சி ஒன்றைச் சாதிக்க இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும். சுத்தம் செய்து தருவதையே ஒரு தொழிலாகவும் நீங்கள் செய்யலாம். அதற்கு மிக மிக முக்கியமாகத் தேவைப்படும் சில தொழில் நுணுக்கங்களின் தொகுப்பு இது. இது சுவைபடச் சமைக்க விரும்பும் பெண்களுக்குப் பேருதவியாக இருக்கும். அவர்களுக்குப் பதிலாக அடுப்படிகளில் வெந்து தணிகிற ஆண்களுக்கும் பெரும் பரிசாக அமையும்.

சுத்தமாக...சுவையாக... அசைவ உணவு தயாரிக்கும் முறைகள்

CHF10.00Preis
  • Book Title சுத்தமாக...சுவையாக... அசைவ உணவு தயாரிக்கும் முறைகள் (Suthamaga Suvaiyaga Asaiva Unavu Thayarikkum Muraigal)
    Author டாக்டர் ம.லெனின் (Dr.Ma.Lenin)
    ISBN 9789382578222
    Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
    Pages 168
    Year 2006
    Edition 1
    Format Paper Back
bottom of page