சின்னஞ்சிறு பழக்கங்கள் | Atomic Habits : கடுகளவு மாற்றங்கள், கற்பனைக்கெட்டா விளைவுகள்
நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வருகிறது என்று அவர் கூறுகிறார். இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.
சின்னஞ்சிறு பழக்கங்கள் | Atomic Habits
எழுத்தாளர் : ஜேம்ஸ் கிளியர் , James Clear
Translator: நாகலட்சுமி சண்முகம், Nagalakshmi Shanmugam
பதிப்பகம் : மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ், Manjul Publishing House
புத்தக வகை : Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்
பக்கங்கள் : 288
Published on : 2019