நிலம் கடந்த தமிழர் வாழ்வும் வரலாறும் (nilam katantha thamizhar vaazhvum varalarum)
தமிழின வரலாற்றுக்கு அயலகத்தமிழர்கள் நலகிய பணிகள்) கண்ணில் அடங்காதவை. எந்தப் பல்கலைக்கழகத்திலும் அடியெடுத்து வைத்திராத அப்பாமரத்தமிழர்களின் வாய்மொழிப்பாடல்களில் உலகப்போர்களின் கதைகளும் காலனித்துவக் கால வரலாறும் நேரத்தியாய்ப் பதிவு செய்யப் பட்டுள்ளன. கண்ணில் பட்ட இடங்களுக்கும், பொருட்களுக்கும் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டிய தன்னிகரில்லாத் தமிழ்ச்செம்மல்கள் இவர்களே இத்தமிழர்களின் செந்நீரிலும் உழைப்பின் உயிர்வாதைகளிலும் தான், சாலைகள், இரயில்பாதைகள் உருப்பெற்று எழுந்து நின்றன. நுறைமுகங்கள் ஆழம் பெற்றன தென்கிழக்காசியாவைக் கட்டியெழுப்பிய தமிழர்களின் உழைப்பை வரலாற்றுக் குறிப்புகள் இன்றும் அடையாளம் காட்டுகின்றன. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல. இந்திய மண்ணின் விடுதலைப போராட்டத்திற்கு. தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தியையும், கிழக்காசியாவிலிருந்து நேதாஜியையும் ஆயத்தமாக்கி அனுப்பி வைத்த தீரர்கள், அயலகத்தமிழர்களே. நிலம் கடந்து அயலகம் சென்ற தமிழர்களின் ஈக வரலாற்றினை வெளிச்சமிட்டுக் காட்டுவதே இந்நூல்,
நிலம் கடந்த தமிழர் வாழ்வும் வரலாறும்
Author: இரா.குறிஞ்சி வேந்தன் (Iraa.Kurinji Vendhan)
Publisher: நன்னூல் பதிப்பகம் (Nannool Pathippagam)
No. of pages: 161
Category: Essay | கட்டுரை, 2023