top of page

மென்துறையில், வேலை வாய்ப்பில் , பொருளாதாரத்தில் , அரசாங்க கண்ணோட்டத்தில் , வாழ்க்கை விழுமியத்தில் உலக அளவில் ஏற்படுகிற மாற்றங்கள், உலகமயமாக்கலில் எல்லா தூண்களிலும் பிரதிபலிக்கின்றன. தாராளமயமாக்கலுக்குப் பின்னான சந்தை, பொருளாதாரம், வாழ்வியல் சிக்கல்களை அந்த தலைமுறை சந்தித்த விதத்தை ஒரு நான்- லீனியராகப் பார்க்க முயற்சிக்கிற தளம் அது. காரணமில்லாத கருணை பிரபஞ்சம் எனில், போரும், அமைதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கமெனில், அதன் நடுப்பக்கம் சந்தையாகும்.

இன்னும் சொல்லப்போனால், அதன் மீதுதான், போரும், அமைதியும் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொள்கின்றன. போர், சந்தை, அமைதி இவை மட்டும் தான் உலக மைய ஸ்வரமாக கேட்டுக்கொண்டேயிருக்கிறது. சந்தையில் சொல்லப்பட்ட போர் மற்றும் அமைதி என்றும் சொல்லிக்கொள்ளலாம்.

போரும், அமைதியும், சந்தையும் எப்போதும் தங்களை சிருஸ்டித்து, அருட்பாலித்து, மாயையிலிருந்து விடுத்து, அழித்து .. தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

- பின்னட்டைக்குறிப்பிலிருந்து

போர் அமைதி சந்தை

CHF12.00Preis
  • Author:             Mani Ramalingam, மணி ராமலிங்கம்

    Language:        தமிழ்

    Page:                164

    Publisher:         Yaavarum Publishers,  யாவரும் பதிப்பகம்

    Category:          Novel, நாவல்

     

     

bottom of page