முதல் உலகப்போர் - மருதன்:
உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலில் இருந்து அமெரிக்கா, ஒரு புதிய வல்லரசாக உயிர் பெற்று எழுந்தது.
முதல் உலகப் போர் ஐரோப்பாவில் மையம் கொண்டது ஏன்? ஆஸ்திரிய இளவரசர் ஒருவரை, செர்பிய பிரஜை ஒருவன் சுட்டுக்கொன்றான் என்பதற்காக முழு ஐரோப்பாவும் போரில் குதிக்குமா? ஐந்து கோடி சிப்பாய்களைக் களத்தில் இறக்கி, ஒரு கோடி பேரை பலி வாங்குமா? ஒரு தலைமுறை இளைஞர்களை முற்றிலுமாகத் துடைத்து அழித்த இந்தப் போரைத் தவிர்த்திருக்கவே முடியாதா?
இந்த நிமிடம் வரை மேற்கு ஆசியா பிரச்னைக்குரிய ஒரு பிரதேசமாக நீடிப்பதற்கும், இத்தாலியில் முசோலினி பாசிசத்தை வளர்த்தெடுத்ததற்கும், ஜெர்மனியில் ஹிட்லர் எழுச்சி பெற்ற-தற்குமான மூல காரணம், முதல் உலகப் போரில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போர் என்பது முதல் உலகப் போரின் தொடர்ச்சி. அல்லது, விளைவு.
மருதனின் இந்தப் புத்தகம், முதல் உலகப் போரின் அரசியல், சமூக, ராணுவ வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கிறது.
முதல் உலகப்போர் - மருதன் / Muthal Ulaga Por
Author: மருதன் (Marudhan)
Language: தமிழ்
Page: 328
Publisher: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Category: History | வரலாறு
Published on : 2009