திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஊரைச் சேர்ந்தவர். பாவாடை-அன்னபூரணி அம்மாள் அவர்களுடைய மூத்தமகன் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்கவென சென்னைக்கு வந்து பிறகு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் படிப்பு. எல்லோரையும்போல கதை, கவிதைகளோடு இந்த அச்சு ஊடகத்துக்குள் நுழைவு. நெற்றிக்கண், தராசு வார இதழில் நிருபராகவும், போலீஸ் செய்தி வார இதழில் உதவியாசிரியராக தொடங்கி குமுதம் வார இதழ் குழுமத்தில் 12 ஆண்டுகாலம் சீனியர் ரிப்போர்ட்டர். நியூஸ் சைரன் வார இதழில் பொறுப்பாசிரியர். பிறகு காட்சி ஊடகம் தந்தி தொலைக்காட்சியில் இயக்க்குநர் சீமான் அவர்கள் வழங்கிய ‘மக்கள் முன்னால்’ நிகழ்ச்சிக்கு கருத்தாக்கக் குழு ஆசிரியர் அனுபவங்களிடையே... பெருமிகு திருச்சி வேலுச்சாமி அவர்களின் ‘ராஜீவ் படுகொலை: தூக்கு கயிற்றில் நிஜம்’என்ற நூலை எழுதி தொகுத்தது. தற்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல... இனி என்ன செய்யலாம்’இந்த புத்தகம்.
மனைவி விஜயபிரியா மற்றும் குழந்தைகள் யாழினி, யாழரசன் ஆகியவர்களுடன்...
முள்ளிவாய்க்கால் முடிவல்ல.../ Mullivaikkal mudivalla
Editor: பா. ஏகலைவன் P. Ekalaivan
Publisher: யாழ் பதிப்பகம் Yarl Pathippagam
No. of pages: 700
Language: தமிழ்
Published on: 2020
Book Format: Paperback
Category: நேர்காணல்
Subject: தமிழக அரசியல், ஈழம்