மாவீரர் நாள் உரைகள் (1989 - 2008) / Maaveerar Naal Uraigal
1989 முதல் 2008 வரை தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு,சுமார் 19 ஆண்டுகள் ஒரு வருடமும் அவர் ஆற்றிய உரை என்பது தமிழீழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைவருக்குமான ஒரு விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை மிகத் தெளிவாக ஒரு வருடமும் அவர் ஆற்றிய உரையை படித்தால் தெரியவரும். தமிழீழ நிலப்பரப்பில் நடந்து வருகின்ற சிங்கள அரசின் கொடுமைகளை உலகிற்கு மிகத் தெளிவாக எடுத்துக்காட்டும் விதமாக அவரது உரைகள் இருக்கின்றன. அதனை முழுமையாகப் படிக்கும் பொழுது ஒரு தொலைநோக்கு உடைய தலைவனின் உரை என்பது மிகை ஆகாது புலிகளின் இயக்கத்தை அதை நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது. இது வெறும் மாவீரர்நாள் உரை மட்டுமல்ல இது சுதந்திரத்துக்காக போராடும் ஒரு விடுதலை இயக்கத்தின் நிலைபாடுகள் என்ன என்பதை புரிந்து கொள்ளவும் இந்த மாவீரர் நாள் உரைகள் நமக்கு விளங்கும். இவை வெறும் போர்ப்பரணிகள் மட்டுமல்ல. தொன்மைமிக்க ஒரு மானுட இனத்தின் தவிர்க்க முடியாத வாழ்வியல் வரலாறு. தமிழர் இறையாண்மைமிக்க ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப ஈகம் செய்த தியாக மறவர்களின் கண்ணியம் கொண்ட புரட்சியின் ஆவணம்.
மாவீரர் நாள் உரைகள் (1989 - 2008) / Maaveerar Naal Uraigal
Author: வேலுப்பிள்ளை பிரபாகரன்
Language: தமிழ்
Page: 216
Publisher: களம் வெளியீட்டகம் (Kalam Veliyeetakam)
Category: History | வரலாறு, Eezham | ஈழம், Speech | உரை, New Releases | புது வரவுகள்
Published on : 2021