top of page

போரும் போர் சார்ந்த சூழலும் ஒரு மனிதனை கோழையாக்கி விடுவதில்லை. மாறாய் தான் வாழும் தாயகத்தில் மாற்றானால் ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகள் அவனுள் விடுதலை யுணர் வையும் தேசப்பற்றையும் சுதந்திரத்திற்காய் பழுச்சுமக்கும் மனப் பக்குவத்தையும் ஏற்படுத்தி விடுகின்றது. அந்த மாற்றத் தினால் தூண்டப்பட்ட மனிதனே போராளியாகின்றான். அந்த மனிதர்களின் போரியல் இன்ப துன்பங்களையும் களநிலை வாழ்வையும் இங்கே படைப்பாக படைத்திருக்கிறார் தூயவன் அவர்கள். தமிழீழப் போர் வரலாறு பல வியக்கத்தக்க சாதனைகளைத் தன்னுள் அடக்கியுள்ளது. அவற்றுள் ஒன்று காயமடையும் போராளிகளைக் காப்பாற்றும் மருத்துவ நடவடிக்கையாகும். தூயவன் ஒரு மருத்துவப் போராளி. முன்னணியிலே போர் நடக்க பின்னணியிலே காயமுற்றவரைக் காப்பாற்றும் போர் இப்போரிலே பங்கேற்ற தூயவன் அதனை மீண்டும் இந்த யுத்த காண்டத்திலே விவரிக்கிறார்.

யுத்த காண்டம் / Yutha Kandam

CHF14.00Preis
  • Author: தூயவன் (Thooyavan)

    Publisher: தமிழர் தாயகம் வெளியீடு

    Language: தமிழ்

    Published on: 2022

    Category: கட்டுரை

    Subject: Eezham | ஈழம், Essay | கட்டுரை, War | போர்

     

bottom of page