"ஆமாம். ராதையை இந்த முறை நிஜமாகவே கல்யாணம் செய்து கொள்ளணும் என்று இருக்கிறேன். நானும் ரொம்ப யோசித்துப் பார்த்து விட்டேன். பரசுராமன்! என்னதான் மறுத்தாலும் அந்தக் கல்யாணம் என் மனதில் ஏதோ ஒரு மூலையில் முள்ளாக குத்திக் கொண்டே இருக்கிறது. சிநேகமும் ஏற்படணும், அன்பையும் பகிர்ந்து கொள்ளணும் என்றால் கல்யாணம் ஒன்றுதான் வழியாக தென்படுகிறது. கல்யாணம் இல்லாமல் செக்ஸ் என்பது ஏதோ பொழுது போக்கிற்கும், த்ரில்லுக்கும் ஒட்டுவருமே தவிர பாசத்தோடு கூடிய நெருக்கத்திற்கு வழிகாட்டாது. ராதையோடு இவ்வளவு இனிமையான அனுபவம் நிகழ்ந்த பிறகு எனக்கு சாதாரண சிநேகம் திருப்தியைத் தரவில்லை. அதற்காக நான் பச்சாதபத்தில் குன்றிப் போய் கொண்டிருக்கிறேன் என்றோ, கல்யாணம் ஆனதும் நேர்மையின் மறு உருவமாக இருப்பேன் என்றோ சொல்லவில்லை. தற்சமயம் மட்டும் ராதையைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் என்னால் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. அப்பாவியான அவள் முகம்தான் அடிக்கடி நினைவுக்கு வருகிறது. அதைத்தான் காதல் என்பார்களோ என்னவோ" என்று நிறுத்தினான் கிருஷ்ணன்.
ராதையும் குந்திதேவியும் / Radhayum Kunti Deviyum
ராதையும் குந்திதேவியும் Radhayum Kunti Deviyum]
Author: Yandamoori Veerendranath எண்டமூரி வீரேந்திரநாத்,
Translator: Gowri Kirubanandan கௌரி கிருபானந்தன்