top of page

மாயாஜாலம், மர்மம், சாகசம், ஞானம், ஆச்சரியம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள 'ரசவாதி' நூல், நவீன காலத்தின் செம்மையான நூல்களில் ஒன்றாக ஆகியுள்ளது. பல கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூல், பல தலைமுறைகளைச் சேர்ந்த எண்ணற்ற வாசகர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. பாலோ கொயலோவின் இந்த அற்புதப் படைப்பு, ஒரு பெரிய பொக்கிஷத்தைத் தேடிக் செல்ல விரும்புகின்ற, ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த ஓர் இடையனான சான்டியாகோ வின் கதையை எடுத்துரைக்கிறது. அவனுடைய தேடல், அவன் கற்பனை செய்துள்ளதைவிட அதிக வித்தியாசமான, அதிக மனநிறைவு அளிக்கின்ற செல்வ வளங்களுக்கு அவனை வழிநடத்திச் செல்லும். நாம் நம்முடைய இதயம் கூறுவதைக் காதுகொடுத்துக் கேட்பது, வாய்ப்புகளை அறிந்து கொள்ளுவது, வாழ்க்கைப் பாதை நெடுகிலும் பரவிக் கிடக்கின்ற சகுனங்களைப் புரிந்து கொள்ளக் கற்றுக் கொள்ளுவது, மிக முக்கியமாக, நம்முடைய கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லுவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சான்டியாகோவின் பயணம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

ரசவாதி / Rasavaathi

CHF20.00Preis
  • Author: பாவ்லோ கொய்லோ (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்)

    Categories: Novel | நாவல்

    • Edition: 01
    • Year: 2019
    • ISBN: 9789388241458
    • Page: 250
    • Format: Paper Back
    • Language: Tamil
    • Publisher:Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
bottom of page