159 அத்தியாயங்கள்(வாரங்கள்).. மூன்றே கால் வருடங்கள் .. ஒரு நாவல்.. என்ற சாதனையை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் ‘ரத்த மகுடம்’ நாவல் வழியே ‘குங்குமம்’ வார இதழ் நிகழ்த்தியிருக்கிறது.
நரசிம்மவர்ம பல்லவரின் பேரனான பரமேஸ்வரவர்மனின் ஆட்சிக் காலத்தில் சில ஆண்டுகள் பல்லவ அரசு சாளுக்கியரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. பின்னர் சாளுக்கியப் படையை முறியடித்து இழந்த அரசைத் திரும்பப் பெற்றது. இது வரலாறு.
போலவே நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் சாளுக்கியரின் தலை நகரான வாதாபி, பல்லவப் படையால் தீக்கிரையானது, இதற்குப் பழிவாங்கத்தான் இரண்டாம் சாளுக்கியப் படையுடன் பல்லவ மன்னர் போரிடவில்லை. காஞ்சியை அப்படியே சாளுக்கியர்களிடம் கொடுத்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார்.
யுத்தமின்றி காஞ்சியைக் கைப்பற்றிய விக்கிரமாதித்தர், வாதாபியைப் பல்லவர்கள் தீயிட்டுக் கொளுத்தியது போல் எரிக்கவில்லை. இதுவும் சரித்திரம்.
தன் தலை நகரை ஏன் பரமேசுவரவர்மர் எதிரிக்குத் தாரைவார்த்தார். பிறகு ஏன் படைதிரட்டி மீண்டும் கைப்பற்றினார்; பழம் நழுவி பாலில் விழுவதுபோல் தன் மடியில் விழுந்த பகைவனின் தலைநகரை ஏன் விக்கிரமாதித்தர் சேதப்படுத்தவில்லை..?
கிளைபரப்பும் வினாக்களுக்கு விடை காண ‘ரத்த மகுடம்’ முயல்கிறது..
ரத்த மகுடம் / Ratha Magudam
எழுத்தாளர் : கே.என்.சிவராமன் (Ke.En.Sivaraaman)
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
புத்தக வகை : Historical Novels | சரித்திர நாவல்கள்
பக்கங்கள் : 880
பதிப்பு : 1